சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை என்றும் நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லை என்பதாலும் அந்த நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர். விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.