கந்தர்வகோட்டை,டிச.7: கந்தர்வகோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர் சாக்கடையாக மாறி தீயணைப்பு நிலையத்துக்கு புகுந்ததால் அவதி. கந்தர்வகோட்டையிலிருந்து குழாய் மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பல்வேறு கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சென்று வருகிறது, இந்த நிலையில் கந்தர்வகோட்டை பெருமாள்கோயில் வீதி வழியாக மலையூர்,
துவார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகின்றது. இதுபோன்று வீணாகி வரும் குடிநீர் அதிக அளவில் பெருகி அந்தப் பகுதியில் இருக்கும் தீயணைப்பு நிலைய வளாகத்திற்குள் புகுந்து சாக்கடையாக மாறி வருகின்றது என நிலையை அலுவலர்களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து உடனடியாக இந்த உடைந்த குடிநீர் திட்ட குழாயினை அடைத்து குடிநீர் வீணாவதை தடுக்கவும் தீயணைப்பு நிலத்தை பாதுகாக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.
The post காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக ஓடும் தண்ணீர் appeared first on Dinakaran.