காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு

1 week ago 4

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவரை ஓர் வழக்கின் விசாரணைக்காக நடுகாவிரி காவல் நிலையத்தி்ற்கு போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரின் சகோதரிகள் கீர்த்திகா வயது (29), மேனகா(31) போலீஸ் நிலையத்திற்கு தனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து சகோதரிகள் இருவரும் காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சகோதரி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி மேனகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article