காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற இருவர் கைது

4 months ago 11

 

ராஜபாளையம், ஜன.6: ராஜபாளையம் அருகே காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் அருகே வேலாயுதபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜூ மகன் வீரகாளை(33), ஆனந்தராஜ் மகன் முத்துராஜ்(30). இருவரும் நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் வந்தனர். அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிக்குமாரிடம், வீரகாளை ‘நான் சரக்கு வாகனத்தை பைனாஸ்சில் தவணைக்கு வாங்கியிருந்தேன்.

நான்கு மாதம் தவணைதொகை கட்டாததால் பைனான்ஸ்காரர்கள் எங்கள் ஊருக்கு வந்து எங்களுக்கு தெரியாமல் வண்டியை எடுத்துச்சென்றுவிட்டார்கள்’ என்று தெரிவித்தார். அப்போது, போலீசார் அவர்களிடம் விபரம் கேட்டனர். அதற்கு, இருவரும் போலீசாரை அவதூறாக திட்டினர். பின்னர் வீரகாளை திடீரென டீசலை தலையில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் டீசல் கேனை கைப்பற்றி தண்ணீர் ஊற்றி வீர காளையை காப்பாற்றினர். பின்னர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிந்து வீரகாளை, முத்துக்குமார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

The post காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article