சென்னை: தமிழகத்தில் உள்ள காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர் வரை சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனை காவல்துறை உயர்திகாரிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அரசாணை முறையாக பின்பற்றப்படவில்லை, காவலர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை பின்பற்றப்படவில்லை என மதுரை வாசிம்பட்டியை சேர்ந்த காவலர் ஹரீஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எசிஓக்கள், ஆகிய எல்லாருக்கும் சங்கங்கள் உள்ளது. ஆனால் காவலர்களுக்கு மட்டும் சங்கம் இல்லை. இது எந்த வகையில் ஜனநாயகம்?, மனித உரிமை மீறல் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
madras police act அடிப்படையில்தான் அண்டை மாநிலங்களிலும் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்த சூழலில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, வார விடுமுறை வழங்குவதில் என்ன சிக்கல் என கேள்வியெழுப்பியனர்.
இந்த அரசாணை பின்பற்றப்படுவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
The post காவலர்களுக்கு வார விடுமுறை வழங்காமல் இருப்பது எந்த வகையில் ஜனநாயகம்..? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.