காவலர்களின் தியாகத்தைப் போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன் - முதல்வர் ஸ்டாலின்

4 months ago 26

சென்னை: “நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article