காவலர் வீரவணக்க நாள்: சென்னையில் காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி மரியாதை

4 months ago 25

சென்னை: பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

Read Entire Article