நாகர்கோவில், டிச.18 : குமரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் மாநில பொது செயலாளர் காளியப்பன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது : குமரி மாவட்டம் காளிகேசத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இந்த பகுதி வனத்துறைக்கு உட்பட்டு வருகிறது. பல நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் வழிபட்டு வரும் காளிகேசம் காளியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தற்போது திடீரென வனத்துறை சூழலியல் சுற்றுலா பகுதி என கூறி ₹30 கட்டணம் வசூலிக்கிறது. இது பக்தர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சுற்றுலா பகுதி என்ற பெயரில் பக்தர்களிடம் ₹30 கட்டணம் வசூலிப்பதை உடனடியாக வனத்துறை நிறுத்த உத்தரவிட வேண்டும். மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இந்த நடவடிக்கையை கைவிட, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
The post காளிகேசம் கோயிலுக்கு செல்ல கட்டணம் வசூலிப்பதை கைவிட வலியுறுத்தல் appeared first on Dinakaran.