பூதப்பாண்டி, ஜன. 11: கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் சக்தி வாய்ந்த காளிஅம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலில் வருகின்ற 13ம்தேதி (திங்கட்கிழமை) மார்கழி மாத பவுர்ணமி பூஜை விழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு பக்தி இசை, 9 மணிக்கு ராஜமேளம், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 10.30 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜை, 12 மணிக்கு நாதஸ்வர மேளம், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 1.30 மணிக்கு அன்னதானம், பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெறுகிறது பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. விழா ஏற்பாடுகளை காளிகேசம் காளிஅம்மன் கோயில் சேவா அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் செய்து வருகின்றனர்.
The post காளிகேசம் கோயிலில் பவுர்ணமி பூஜை 13ம்தேதி நடக்கிறது appeared first on Dinakaran.