
அல்ஜியர்ஸ்,
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டில் உள்ளூர் கால்பந்து லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் உள்ளூர் அணியான எம்.சி.அல்ஜர் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஆட்டம் நிறைவடைந்து ரசிகர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டம் நடைபெற்ற மைதானத்தின் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் மைதான இருக்கைகளில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலர் படுகாயமடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 50க்கும்மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.