
லண்டன்,
ஜெர்மனி, ஹங்கேரி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சமீப காலமாக கால்நடை நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நோய்களால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால் கால்நடைகள் சாப்பிட்டால் அதற்கு நோய் பரவும்.
எனவே கால்நடை நோய்கள் நுழைவதை தடுக்க சாண்ட்விச், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வெண்ணெய் போன்ற உணவுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்துக்குள் கொண்டு வர அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதனை மீறி கொண்டு சென்றால் எல்லை பகுதியிலேயே அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும். மேலும் அதனை கொண்டு செல்பவர்களுக்கு சுமார் ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.