கால் பவுன் கம்மலுக்காக காரில் கடத்தப்பட்ட இளைஞர் - பத்திரமாக மீட்ட போலீசார்

3 months ago 13
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் பணியாற்றி வரும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணிடம் நகையை வாங்கி ஏமாற்றியதாக கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டனர். அழகிரிப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிடம், நெய்வேலியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் 6 மாதத்திற்கு முன்பு கால் பவுன் தங்கக் கம்மலை வாங்கி அடகு வைத்ததாகவும்,  அதனை திருப்பித் தராததால் பெண்ணின் சகோதரர் அஜித்குமார்  கூட்டாளிகளுடன் சென்று தொழிற்சாலை பேருந்தில் சென்ற ராமராஜை காரில் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. சக தொழிலாளர்கள் அளித்த புகாரின்பேரில் ராமராஜன் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்து ஆந்திரா மாநிலம் நாகலாபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த அவரை போலீசார் மீட்டனர். 
Read Entire Article