மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில், போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், ரஷ்ய வீராங்கனை டயானா ஸ்னெய்டருடன் மோதினார். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய இகா, 2வது செட்டை போராடி இழந்தார்.
இருப்பினும், 3வது செட்டை எளிதில் அவர் வசப்படுத்தினார். அதனால், 6-0, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், குரோஷிய வீராங்கனை டோனா வெகிச் போட்டியிட்டனர். அதில் அற்புதமாக ஆடிய மேடிசன், 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
* ஆடவர் பிரிவில் அலெக்ஸ் வெற்றி
ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் ரோமன், கனடா வீரர் டெனிஸ் விக்டரோவிச் ஷபோவலோ மோதினர். துவக்கம் முதல் அநாயாசமாக ஆடிய அலெக்ஸ், 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாபோ ஜூனியர், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்ட்ரே முல்லர் மோதினர். இந்த போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சஸ் எளிதில் வெற்றி பெற்றார்.
The post கால் இறுதிக்குள் கால் வைத்த இகா appeared first on Dinakaran.