காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

1 day ago 5

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (04.06.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article