காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு

2 months ago 13
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் கனடாவின் ஆடியோ மற்றும் வீடியோ கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், கனடாவுக்கு எதிராக இந்தியா சைபர் தாக்குதல் நடத்தும் என்று அடிப்படை ஆதாரமின்றி கனடா கூறுவதாகவும், உலக அரங்கில் இந்தியாவைத் தவறாக சித்தரிக்க கனடா முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். தீபாவளி நிகழ்ச்சியை கனடா எதிர்க்கட்சித் தலைவர் திடீரென ரத்து செய்தது சகிப்பின்மையின் உச்சகட்டம் என்று கூறிய ரந்தீர் ஜெய்ஸ்வால், கனடாவிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 
Read Entire Article