திருவாரூர், பிப். 14: மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில முழுவதும் காலியாக இருந்து வரும் சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும். அவ்வாறு நிரப்பும்போது தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்திடவேண்டும். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு என்ற கொள்கை முடிவினை அமல்படுத்தவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
திருவாரூரில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்குசங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தர். செயலாளர் சாமி ராஜன், பொருளாளர் அன்பரசன், துணைத்தலைவர் ஜோதிநாதன், இணை செயலாளர் வினோத் கண்ணன், தணிக்கையாளர் தமிழ் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் ராஜ்குமார், தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளர் சுதாகர், பொருளாளர் பெரியண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.