காலாவதியான பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

2 days ago 2

குடியாத்தம், டிச.31: குடியாத்தம் நகர மன்ற கூட்டம் நேற்று தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் அரசு, மனோஜ், மோகன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் நகரத்தில் நடைபெற்று வரும் கழிவு நீர் கால்வாய், சாலை, அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் போலி எம் சேன்ட் மணல் பயன்படுத்தப்படுகிறது. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவு நீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக நகர மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

The post காலாவதியான பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article