செங்கோட்டை அருகே `புலி’ அட்டகாசம் : 2வது முறையாக தோட்டத்தில் புகுந்து கன்றுகுட்டியை தாக்கி கொன்றது

2 days ago 3

செங்கோட்டை: செங்கோட்டை அருகே 2வது முறையாக தோட்டத்தில் புகுந்து கன்று குட்டியை புலி தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் அடவி நயினார் அணைக்கு செல்லும் வழியில் முகம்மது ஹனிபா(52) என்பவருக்கு சொந்தமான மாட்டு தொழுவம் உள்ளது. இங்கு நேற்றிரவு புகுந்த புலி, கன்று குட்டியை கழுத்து, பின்புறம் கடித்து கொன்றது. இன்று காலை கன்றுகுட்டி இறந்த சம்பவம் அறிந்து முகம்மது ஹனீபா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 30ம்தேதி, முகமமது ஹனீபாவின் மாட்டு தொழுவத்தில் சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது முறையாக சிறுத்தை தாக்கி கன்று குட்டி உயிரிழந்து உள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ம்தேதி வடகரை ரகுமானியாபுரத்தில் காஜா மைதீன் என்பவரது தோட்டத்தில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது. சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் ஏற்கனவே வடகரை அன்பு இல்லம் மற்றும் மேக்கரை அணை பகுதியில் கூண்டு வைக்கப்பட்டும் சிறுத்தைகள் எதுவும் சிக்கவில்லை. அடிக்கடி புலிகள் நடமாட்டம் இருப்பதால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஊரை காலி செய்து வெளியூர் செல்லும் பரிதாப நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

The post செங்கோட்டை அருகே `புலி’ அட்டகாசம் : 2வது முறையாக தோட்டத்தில் புகுந்து கன்றுகுட்டியை தாக்கி கொன்றது appeared first on Dinakaran.

Read Entire Article