சென்னை: காலாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. காலாண்டு தேர்வுகள் கடந்த மாதம் 27ம் தேதி வரை நடந்தது. அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறையில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா, பயன்பாட்டுக்கு உதவுவதாக கட்டிடங்கள் இருக்கின்றனவா என்றும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், காலாண்டு விடுமுறை முடிந்து 7ம் தேதி பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு ஏற்ப பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் தூய்மையாக இருக்கவும், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து ெகாடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதற்கேற்ப அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகங்களை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதையடுத்து, இன்று வழக்கம் போல 32 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.
The post காலாண்டு விடுமுறை முடிந்தது: இன்று பள்ளி திறப்பு appeared first on Dinakaran.