தஞ்சாவூர், டிச. 6: தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவரச மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் ரகுநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜப்பா, கண்ணன், ராணி, சோமு, ராமராஜ், ரேவதி, ராதா கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை வகித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சவிதா ராஜலிங்கம், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவோம் என்று தேர்தல் கால வாக்குறுதி வழங்கினார். தற்போது தமிழகமெங்கும் சத்துணவு ஊழியர்களின் காலி பணியிடங்கள் 54,000 ஆக உள்ளது.
இதை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆண்டு காலம் சத்துணவு திட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள், தொகுப்பு ஊதிய அடிப்படையை ஏற்க மறுக்கிறோம். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மறுபரிசிலனை செய்து, சத்துணவு ஊழியர்களை முறையான கால முறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும். எதிர்காலத்தில் இது குறித்து பலக்கட்ட போராட்டங்களை நடத்திட, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கம் ஈடுபட உள்ளது. தற்போது காலை சிற்றுண்டியில் உள்ளது போல் ஆட்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கம் முற்றிலுமாக ஏற்க மறுக்கிறது என்றார்.
The post காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் appeared first on Dinakaran.