வேலூர்: இந்திய கல்வி முறையை மாற்றுவதற்காகவே தேசிய புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்பில், தென்மண்டல அளவிலான துணைவேந்தர்கள் மாநாடு வேலூர் விஐடி பல்கலை.யில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: புதிய கல்விக் கொள்கை மாற்றத்துக்காகவே கொண்டுவரப்படுகிறது. மனப்பாடம் செய்தல், கற்றல், தேர்வு முறை போன்றவற்றை மாற்றியமைக்கிறது. நாட்டை மாற்றியமைக்க இது அவசியமாகும்.