காலநிலை மாற்றம் என்பதே ஒரு மிகப்பெரிய மோசடி : டிரம்ப்

3 months ago 15
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், காலநிலை மாற்றம் என்ற கருத்தே மிகப்பெரிய மோசடி என டிரம்ப் விமர்சித்துள்ளார். விஸ்கான்சனில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப், கால நிலை மாற்றத்தை விட அணு ஆயுதம் வைத்திருப்பவர்களால் தான் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலக வெப்பமயமாதல் பற்றி பேசிவரும் நிலையில், அதற்கு நேர் மாறாக வெப்பநிலை தணிந்துவருவதாக கூறிய டிரம்ப், 500 ஆண்டுகளுக்குப் பின் கடல்மட்டம் உயர்வதைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள் என கிண்டல் அடித்தார்.
Read Entire Article