காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு இல்லை: பாலச்சந்திரன் தகவல்

4 months ago 15

சென்னை: “வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. கடற்கரைப் பகுதியில்தான் அது நிலவுகிறது. இது மெதுவாகவே கடந்து செல்லும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.12) செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது அவர் கூறியது: “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு அருகே நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

Read Entire Article