காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை கரூரில் 24.40 மிமீ மழை பதிவு

2 months ago 11

 

கரூர், நவ. 18: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 24.40 மிமீ மழை பெய்துள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவில் மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கருர் மாவட்டம் முழுதும் நேற்று இதமான சீதோஷ்ணநிலை நிலவியது.

இதனடிப்படையில், கரூர் 1.60 மிமீ, அரவக்குறிச்சி 3 மிமீ, அணைப்பாளையம் 4 மிமீ, க.பரமத்தி 1.80 மிமீ, மாயனூர் 2 மிமீ, பஞ்சப்பட்டி 6 மிமீ, கடவூர் 6 மிமீ என 24.40 மழை பெய்திருந்தது. மற்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.வடகிழக்கு பருவமழை முடிவடைய 40 நாட்களே உள்ளதால் அதற்குள் கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.

 

The post காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை கரூரில் 24.40 மிமீ மழை பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article