கார்த்திக் சுப்புராஜின் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமான சமூக வலைதள பிரபலம்

3 weeks ago 4

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அதன்படி, 'மெர்குரி', 'மேயாத மான்', 'பென்குயின்' உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக நடிக்க சமூக வலைதள பரபலம் நிஹாரிகா ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஸ்டோன்பென்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Read Entire Article