
மும்பை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும்.
இதற்கிடையில், பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா அறிமுகமாக இருக்கிறார். அனுராக் பாசு இயக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பதி பத்னி அவுர் வோ' படத்தின் 2-ம் பாகத்தில் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரீலீலாவுக்கு பதில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஷா ததானி, கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியான 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.