கார்த்திகை பட்டியில் சைக்கிள் ரேஸ்

4 months ago 12

 

தொட்டியம், பிப்.17: தொட்டியம் தாலுகா, கார்த்திகைபட்டியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கார்த்திகைப் பட்டியில் வருடந்தோறும் சைக்கிள் பந்தயம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் கார்த்திகைபட்டியில் இருந்து காட்டுப்புத்தூர் பிரிவு ரோடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் இளைஞர்கள் சைக்கிளை ஓட்டிச் சென்றனர்.

சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றனர்.பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் சில இடங்களில் இடரி விழுந்த போதும் மீண்டும் போட்டியில் வீரர்கள் பயணித்த காட்சி பார்வையாளர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. போட்டி முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். சைக்கிள் பந்தய போட்டிகளை கார்திகை பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post கார்த்திகை பட்டியில் சைக்கிள் ரேஸ் appeared first on Dinakaran.

Read Entire Article