கார்த்திகை தீபத்திருவிழா மகாதீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

3 months ago 16
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி சுமார் 2000 அடி உயரத்தில் உச்சி பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.  இதே போன்று அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழாவில் சொக்கப்பனை கொலுத்தும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது...கோவிந்தா! கோவிந்தா! என்று விண்ணை முட்டும் அளவில் பக்தர்கள் கர கோஷங்களுடன் வழிபாடு செய்தனர்.. திருச்சி, திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 
Read Entire Article