சென்னை: கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு இன்று முதல் 15ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாள் (டிச.13ம் தேதி) மற்றும் பௌர்ணமியை(டிச.14ம் தேதி) முன்னிட்டு இன்று முதல் 15ம் தேதிவரை 4 நாட்கள் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல் வேறு இடங்களிலிருந்தும் குறிப்பாக சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இன்று சென்னை- திருவண்ணாமலைக்கு 269, பல்வேறு இடங்களிலிருந்து – திருவண்ணாமலைக்கு 948 பேருந்துகளும், நாளை சென்னை- திருவண்ணாமலைக்கு 643, பல்வேறு இடங்களிலிருந்து – திருவண்ணாமலைக்கு 3,689 பேருந்துகளும், நாளை மறுநாள் சென்னை- திருவண்ணாமலைக்கு 801, பல்வேறு இடங்களிலிருந்து – திருவண்ணாமலைக்கு 2,543 பேருந்துகளும். டிச. 15ம் தேதி சென்னை- திருவண்ணாமலைக்கு 269, பல்வேறு இடங்களிலிருந்து – திருவண்ணாமலைக்கு 947 பேருந்துகளும் என மொத்தம் 4 நாட்களுக்கு சென்னையிலிருந்து 1,982 பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 8,127 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
The post கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.