லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 250கிமீ தொலைவில் பலியா மண்டி பஹவுதின் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் சிலர் ஈடுபட்டிருந்தனர். நேற்று அந்த வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் ஒரு குழந்தை, நான்கு பெண்கள் உள்பட 6 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து 6 பேர் பலி appeared first on Dinakaran.