கார்த்திகை தீப விழா எதிரொலி.. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

6 months ago 25

மதுரை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், மழை மற்றும் பனியின் தாக்கத்தால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, திருக்கார்த்திகை தீப விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மல்லிப்பூ கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பிச்சிப்பூ 1,000 ரூபாய்க்கும், முல்லை பூ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 120 ரூபாய்க்கும், சம்மங்கி 120 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 500 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாய்க்கும், சிறியது 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

இதேபோல, குமரி மாவட்டம் தோவாள மலர் சந்தை, தஞ்சை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

Read Entire Article