பரமக்குடி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ஆஷிக் அகமது (38). மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் விடுப்பு எடுத்து காரில் குடும்பத்துடன் ராமேஸ்வரம் அருகேயுள்ள அரியமான் பீச் சென்றார். நேற்று அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு புறப்பட்டனர்.
பரமக்குடி அருகே நென்மேனி வளைவு பகுதியில் வந்தபோது அவ்வழியாக வந்த ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரது காரும், இவர்களது காரும் திடீரென நேருக்குநேர் மோதின. இதில் காரை ஓட்டி வந்த போலீஸ் ஏட்டு ஆஷிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு கார்களில் வந்த 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
The post கார்கள் மோதி மதுரை ஏட்டு பலி appeared first on Dinakaran.