கார் ரேஸ் வெற்றி, பத்மபூஷன் விருது.. அஜித்துக்கு வாழ்த்து சொன்னாரா விஜய்?

2 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் சினிமா, கார் ரேஸ் என இரண்டிலும் முழு கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடித்த விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்தநிலையில், துபாய் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தை பெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல், 76வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு தரப்பில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. சினிமாவில் 30 ஆண்டுகளாக செய்த பங்களிப்பிற்காக அஜித் குமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் குமாருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தவெக தலைவரும், நடிகருமான விஜய் எந்த வாழ்த்தையும் கூறவில்லை என்று அஜித் ரசிகர்களும், பதிலுக்கு விஜய் ரசிகர்களும் வலைத்தளத்தில் காரசாரமாக மோதிக்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது குறித்து வதந்ததிகளுக்கு அஜித் குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய சுரேஷ் சந்திரா, "துபாய் 24H கார் ரேஸில் அஜித் குமார் வென்ற பின் முதல் வாழ்த்து வந்ததே விஜய் சாரிடம் இருந்து தான். அதைப்போல அஜித்துக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டதும், விஜய்யிடம் இருந்து தான் போன் மூலம் முதல் வாழ்த்து வந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கிறது. எனவே, விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் எந்த உண்மையும் இல்லை' என்று கூறியிருக்கிறார்.

அஜித்துக்கு ஏன் விஜய் வாழ்த்து சொல்லல? அஜித்துக்கு வந்த முதல் கால்.. விஜய் சொன்ன வார்த்தை..!#vijay #ajith pic.twitter.com/LRKwZW1Sc3

— Thanthi TV (@ThanthiTV) February 1, 2025
Read Entire Article