சிவகங்கை: கார் மரத்தில் மோதி விஏஓ மனைவி, மகள் பலியாகினர். விஏஓவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் முருகன் (38). இவர் மனைவி சுப்புலட்சுமி (32), மகள்கள் மதிவதனி (8), சுவையாழினி (5) ஆகியோருடன் நேற்று அதிகாலை திருச்செந்தூர் சென்று விட்டு காரில் சாலைக்கிராமம் திரும்பிக் கொண்டிருந்தார். காரை முருகன் ஒட்டி வந்தார்.
இளையான்குடி அருகே கோட்டையூர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த மதிவதனி, சுவையாழினி, முருகன் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மதிவதனி உயிரிழந்தார். முருகன் மற்றும் சுவையாழினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post கார் மரத்தில் மோதியதில் விஏஓ மனைவி, மகள் பலி appeared first on Dinakaran.