
சென்னை,
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நட்சத்திர தம்பதிகளான நாக சைதன்யா - சோபிதா ஜோடி சென்னையில் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பகிர்ந்துள்ள நாக சைதன்யா, இந்த நாள் அருமையாக சென்றதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மறுபுறம் சோபிதா, கார் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.