காரைக்குடி, ஜன. 22: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காரைக்குடிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜிவ்காந்தி சிலை அருகே கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை, காரைக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், முன்னாள் எம்எல்ஏ கே.முருகவேல், மாநகராட்சி மேயர் நா.குணசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கல்லல் கரு அசோகன், பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, கல்லல் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், நெடுஞ்செழியன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் குமரேசன்,
கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், டிடீசிபி அப்ரூவல் கமிட்டி உறுப்பினர் ஜான்கென்னடி, மாவட்ட ஆதிதிரவிடர்நலக்குழு மாவட்ட தலைவர் கொத்தமங்கலம் சேது, துணை அமைப்பாளர் மாவிடுதிகோட்டை சசிக்குமார் பெரியசாமி, மாநகராட்சி உறுப்பினர் அன்னை எஸ்.மைக்கேல், கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, துணைத்தலைவர் ராஜேஸ்வரி அழகப்பன், புதுவயல் பேரூராட்சி தலைவர் முகமதுமீரா, துணைத்தலைவர் பகுருதீன்அலிபாய்,
பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சிவசங்கர், துணைத்தலைவர் ராம.ருக்மணி, சாக்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் எஸ்.பாண்டி, கானாடுகாத்தான் பேரூராட்சி சேர்மன் ராதிகா ராமச்சந்திரன், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், கானாடுகாத்தான் பேரூராட்சி உறுப்பினர் செட்டிநாடு வி.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post காரைக்குடியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு appeared first on Dinakaran.