காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

4 months ago 16

காரைக்குடி, டிச. 20: காரைக்குடியில் டிஎன்எஸ்டிசி ஏஐடியூசி சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

பொதுசெயலாளர் விஜயசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் மணவழகன், மாநில தலைவர் உள்ளாட்சி ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஏஜி.ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். ஒப்பந்த முறையில் வாடகை பஸ்களை வாடகைக்கு எடுத்து ஓட்டக்கூடாது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

The post காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article