காரைக்கால் அரசு செவிலியர் கல்லூரியில் பொங்கல் விழா

2 hours ago 3

*அமைச்சர் திருமுருகன் கண்ணை கட்டி உரியடித்தார்

காரைக்கால் : காரைக்கால் அரசு செவிலியர் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. இதில் அமைச்சர் திருமுருகனுக்கு கண்ணை கட்டி உரியடித்தார். மாணவிகள் உற்சாகமாக நடனமாடி அசத்தித்தனர்.

காரைக்காலில் உள்ள மதர் தெரசா அரசு செவிலியர் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் மண் பானையில் பொங்கல் வைத்து மாணவிகள் குலவை சத்தம் எழுப்பி பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு தலைமை வகித்து பொங்கல் பாணியில் பச்சரிசி, வெள்ளம் உள்ளிட்ட பொருட்களை வைத்து விழாவை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன், ஜிப்மர் கல்லூரி முதல்வர் மருத்துவர் குஷாகுமார் சாகா, காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணகி, மதர் தெரசா கல்லூரி முதல்வர் ஜெயபாரதி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் உறியடிக்கும் நிகழ்வில் அமைச்சர் திருமுருகனுக்கு மாணவிகள் கண்ணை கட்டி பானை அடிக்க கூறியதை அடுத்து அமைச்சர் திருமுருகன் கண்ணை கட்டிக்கொண்டு பானை தேடி வந்து சரியாக முதல் அடியிலேயே பானையை அடித்து உடைத்து வெற்றி பெற்றார்.

பாரம்பரிய விளையாட்டுகளில் உறியடித்தல், கரும்பு உடைத்தல்,ரங்கோலி கோலம் இட்டு மகிழ்ந்த மாணவிகள் பின்னர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் ஜெயபாரதி தலைமையில் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post காரைக்கால் அரசு செவிலியர் கல்லூரியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Read Entire Article