காருக்கு பெட்ரோல் நிரப்பியபின் பணம் கொடுக்காமல் சென்ற வாலிபர் கைது

2 months ago 8

பொன்னமராவதி,நவ.29: பொன்னமராவதியில் மூன்று பெட்ரோல் பங்குகளில் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றவை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் கேசராபட்டி பெட்ரோல் பங்கில் ஒரு கார் வந்தது. ரூ.2 ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர். பெட்ரோலுக்கு பணம் கொடுக்காமல் திடீர் என் காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இதனையடுத்து உலகம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு போலீசார் அந்த காரை மடக்கிப்பிடித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா இருந்திராபட்டி அருகில் உள்ள வளதாடிப்பட்டியை சேர்ந்த மதன்(20) என்பதும் இவர் அஜீத்குமார் என்பவரின் காரை எடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இது போன்று ஏற்கனவே மூன்று பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்துள்ளனர்.

The post காருக்கு பெட்ரோல் நிரப்பியபின் பணம் கொடுக்காமல் சென்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article