கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காரில் வந்த 4 பேர் கையைப் பிடித்து சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. மானந்தவாடியில் காரில் மதுபோதையில் இருந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டதை ஆதிவாசி இளைஞர் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்தவர்கள் அவரின் கையை பிடித்துக் கொள்ள கார் வேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயம் ஏற்பட்ட ஆதிவாசி இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காரிலிருந்த 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.