காரியாபட்டி, நவ.22: காரியாபட்டியில் முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காரியாபட்டியில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலான முத்தாலம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மங்கல இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டது. விக்னேஸ்வரர் பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப பூஜை, ஸ்பர்ஷாஹீதி, பிம்பா ஹீதி, யாக சாலையில் திரவியா ஹீதி, பூர்ணா ஹீதி முடிந்தவுடன் புனித கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் காரியாபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post காரியாபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.