காரியாபட்டி அருகே பயிர்களை நாசமாக்கிய காட்டுப்பன்றிகள்

1 month ago 4

காரியாபட்டி, நவ.19: காரியாபட்டி அருகே 10 ஏக்கர் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காரியாபட்டி அருகே பாப்பனம் கிராமத்தில் ஒரு சில விவசாயிகள் கோடையில் நெற் பயிர்கள் பயிரிட்டனர். தற்போது இப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் தயார் நிலையில் இருந்தது.
இங்கு நேற்று முன்தினம் இரவு நுழைந்த 50க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் நிலத்தில் உள்ள நெற்பயிர்களை சேதப்ப டுத்தியுள்ளன.

இதனால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் பெய்த மழையை நம்பி நெல் பயிர் செய்தோம்.

தொடர்ந்து அவ்வப்போது பெய்த மழையினால் நெல் பயிர்கள் நன்றாக செழிப்பாக வளர்ந்து வந்தது. தற்போது 2 வார காலத்தில் அறுவடை செய்யும் நேரத்தில் காட்டுப் பன்றிகள் நெற் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. நெற்பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காரியாபட்டி அருகே பயிர்களை நாசமாக்கிய காட்டுப்பன்றிகள் appeared first on Dinakaran.

Read Entire Article