அரூர், அக்.5:தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காராமணி பயிரிடப்பட்டுள்ளது. 65 நாள் பயிரான காராமணி சிவப்பு, வெள்ளை என இருரகங்களில் உள்ளது. பருவ மழை இல்லாததால் 400 கிலோ விளைச்சல் கிடைக்கும் இடத்தில் 150 கிலோ மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ ₹70க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, விளைச்சல் குறைவால் விலை உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
The post காராமணி விளைச்சல் குறைவு appeared first on Dinakaran.