
கடப்பா,
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் செம்மரம் மறைத்து வைத்து கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை சோதனையிடுவதற்காக போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது.
இதையடுத்து சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு போலீசார் லாரியை தடுத்து நிறுத்த தயாராக இருந்த நிலையில், லாரியை விட்டுவிட்டு டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினர். இதையடுத்து லாரியை சோதனையிட்டதில் அதில் காய்கறிகளுக்குள் மறைத்து வைத்து செம்மரம் கடத்தியது தெரிய வந்தது.
அதில் இருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் மற்றும் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.