காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்

4 hours ago 3

 

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவு காரணமாக காலை 10:30 மணி அளவில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர் காமெடி நடிகர் கவுண்டமணி. 80 – 90 களில் நகைச்சுவை என்றாலே அனைவர் நினைவிருக்கும் வருவது கவுண்டமணி செந்தில் தான். அந்த காலத்தில் செந்திலுடன், கவுண்டமணி கொடுத்த காமெடி காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இதுவரை எந்த காமெடியும் வரவில்லை என்றே கூறலாம். இவர்களின் வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.

1970-ம் ஆண்டு வெளியான ‘ராமன் எந்தன் ராமனடி’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக நுழைந்தார். 1971-ம் ஆண்டு வெளியான ‘தேனும் பாலும்’ படத்தில் சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கவுண்டமணி.
1980 காலகட்டத்தில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நாயகன் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலமாக தான் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதன்பின் படங்களில் நடிக்க துவங்கிய கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவை தனது கவுண்டர்களால் ஆண்டு வந்தார்.

நடிகர் கவுண்டமணி 1963-ம் ஆண்டு ஷாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) இன்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

The post காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article