காப்புக்காடுகளில் இருந்து 1 – 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி: அமைச்சர் பொன்முடி

4 hours ago 2

சென்னை; காப்புக்காடுகள் பகுதியில் 3 கிலோ மீட்டருக்கு மேல் வரும் காட்டுப்பன்றி களை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய த.வா.க. எம்.எல்.ஏ. வேல்முருகன்; விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய மதிமுக எம்.எல்.ஏ. ரகுராமன்; காட்டுப்பன்றிகளை கொல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் பொன்முடி; காப்புக்காடுகளில் இருந்து 1 – 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி வழங்கப்படும். விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட விவசாயிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யபப்டும். காப்பு காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காட்டு பன்றிகளை சுட அனுமதி இல்லை. வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது ஒன்றிய அரசுதான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது; அதை நீக்குவது எளிதல்ல. ஒன்றிய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல என்று கூறினார்.

The post காப்புக்காடுகளில் இருந்து 1 – 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Read Entire Article