'காந்திக்கு பிறகு தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடிதான்' - அமித்ஷா

5 months ago 38

காந்திநகர்,

நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு தூய்மையின் தேவை குறித்து பிரதமர் மோடி எடுத்துக் கூறியிருக்கிறார் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசியபோது அவர் கூறியதாவது;-

"குஜராத்தின் புதல்வர்களான மகாத்மா காந்தியும், பிரதமர் மோடியும் இந்த நாட்டிற்கு தூய்மையை வாக்களித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு, செங்கோட்டையில் இருந்து தூய்மை மற்றும் கழிப்பிட வசதிக்கான அத்தியாவசிய தேவை குறித்து பிரதமர் மோடி எடுத்துக் கூறியிருக்கிறார். மகாத்மா காந்திக்கு பிறகு தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடிதான்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார். 

Read Entire Article