காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது

3 months ago 21

ஊத்துக்கோட்டை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்ட நிலையில், பெரியபாளையம் அருகே, கொசவன்பேட்டை, கூரம்பாக்கம், பூச்சி அத்திப்பேடு ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது பானங்கள் விற்பனை செய்வதாக பெரியபாளையம் மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, காந்தி ஜெயந்தி அன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற பூச்சி அத்திப்பேடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி (50) என்பவரிடம் 29 பாட்டில்களையும், கூரம்பாக்கத்தைச் சேர்ந்த விஜி (27) என்பவரிடம் 30 பாட்டில்களையும், கொசவன்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (51) என்பவரிடம் 32 பாட்டில்களையும், சரவணன் (37) என்பவரிடம் 36 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article