
ஐதராபாத்,
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'ஏஜெண்ட்'. ராமபிரம்மம் சுங்கரா தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, அகிலின் பிரீ-லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், 'காதலை விட பெரிய போர் எதுவும் இல்லை' என்ற வாசகம் இடம்பெற்றிருகிறது. மேலும், இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அகிலின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது.
இப்படத்தை இயக்குனர் முரளி கிஷோர் இயக்க உள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கிறார். நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.