செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, இளநகர் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் பாலாஜி (23) என்பவர் இளம்பெண்ணிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், பாலாஜி ஏற்கனவே திருமணமானவர் என சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து பாலாஜியிடம் பழகுவதை அவர் தவிர்த்து வந்தார். இதற்கிடையில், பெற்றோர் விருப்பத்தின்படி கடந்த 6ம் தேதி செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தில் உள்ள உறவினர் மகனுடன், இளம்பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையறிந்த பாலாஜி, கடந்த 7ம் தேதி மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று, இளம்பெண்ணுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.
பின்னர், இளம்பெண்ணுக்கு போன் செய்த பாலாஜி, `உனது திருமணத்தை நிறுத்திவிட்டேன்.என்னிடம் தினமும் பேசவேண்டும், என்னிடம் ஒருநாள் இரவு இருந்துவிட்டு போ. இல்லா விட்டால் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து அசிங்கப்படுத்தி விடுவேன்’ எனக் கூறி டார்ச்சர் செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் ஊருக்கே சென்று, `என்னை மீறி நீ எப்படி திருமணம் செய்து கொள்கிறாய் என்று பார்க்கிறேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் செய்யாறு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்.
The post காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நெருக்கமான படங்களை காட்டி காதலி திருமணத்தை நிறுத்திய காதலன்: ஒருநாள் இரவு இருந்துவிட்டு போ என மிரட்டியதால் போலீஸ் வலை appeared first on Dinakaran.